அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போட்டி போடும் 4 இயக்குனர்கள்


sivalingam| Last Modified வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (23:56 IST)
அஜித்தின் 'விவேகம்' இன்று வெளியாகி அஜித் ரசிகர்களை திருப்தி செய்திருந்தாலும் பொதுவான ஆடியன்ஸ்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை தந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் மிரட்டியிருக்கும் 'விவேகம்' கதையை கோட்டைவிட்டது பெரிய மைனஸாக பார்க்கப்படுகிறது.


 
 
இந்த நிலையில் 'விவேகம்' படத்திற்கு அதிகமான அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தபோதிலும் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க நான்கு பிரபல இயக்குனர் போட்டி போட்டு அவரிடம் கதை சொல்ல தேதி கேட்டுள்ளதாக கோலிவுட்டில் ஒரு வதந்தி பரவி வருகிறது.
 
ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர், வெங்கட்பிரபு மற்றும் ஜெயம் ராஜா ஆகியோர்தான் அந்த நான்கு இயக்குனர்கள். நான்கு பேர்களிடமும் கதை கேட்டு அஜித் யாரை தேர்வு செய்யப்போகிறார் என்பதுதான் இப்போதையை மில்லியன் டாலர் கேள்வி


இதில் மேலும் படிக்கவும் :