வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (22:57 IST)

மனிதர்களே இல்லாத இடத்தை அஜித்துக்காக தேடி கண்டுபிடித்தோம்: கலை இயக்குனர்

அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படம் முதல் நாளே ரூ.100 கோடி வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை



 
 
இந்த நிலையில் இந்த படத்தின் கலை இயக்குனர் மிலன் இந்த படத்தால் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார். ஒரு காட்சிக்கு மனிதர்கள் நடமாட்டமே இல்லாத இடம் தேவைப்பட்டதாகவும், அந்த இடத்தை பல்கேரியாவில் தானும் இயக்குனர் சிவாவும் மைனஸ் டிகிரி குளிரில் தேடி அலைந்து கண்டுபிடித்ததாகவும், அந்த காட்சியில் அஜித்தின் நடிப்பு இதுவரை தான பார்த்திராத வகையில் மாஸ் ஆக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
 
மேலும் உழைப்பிலும் அர்பணிப்பிலும் எங்கள் எல்லோர்க்கும் அஜித் முன்னோடியாக இருந்ததாகவும் அவருடன் பணிபுரிந்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமை என்றும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.