அஜித்தால் தான் இன்று நான் உயிர் வாழ்கிறேன். ஒரு ஸ்டண்ட் இயக்குனரின் நெகிழ்ச்சியான கதை


sivalingam| Last Modified வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (00:12 IST)
தல அஜித் ஒரு நல்ல நடிகர் மட்டுமின்றி மனிதாபிமானத்தில் மிக உயர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது நடிப்புக்காக சேர்ந்த ரசிகர்களை விட அவரது குணத்திற்காக சேர்ந்த ரசிகர்களே மிக அதிகம்


 
 
இந்த நிலையில் அஜித் படத்தில் பணிபுரிந்த ஒரு ஸ்டண்ட் இயக்குனரின் வீடு சமீபத்தில் தீவிபத்து ஏற்பட்டு முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவருக்கு அஜித் ஆறுதல் வார்த்தை கூறியது மட்டுமின்றி, புதிய வீடு கட்ட தேவையான செங்கல் முதல் சிமிண்ட், மணல் வரை தனது சொந்தக்காசில் வாங்கி கொடுத்தாராம்
 
அதுமட்டுமின்றி அவரே பார்த்து பார்த்து வீடு முழுவதற்கும் இண்டீரியர் டிசைன் செய்து கொடுத்தாராம். முன்பு இருந்த வீட்டை விட தற்போது அதிநவீன வீட்டில் இருக்கும் அந்த ஸ்டண்ட் இயக்குனர், அஜித் மட்டும் அன்று உதவி செய்யாமல் இருந்திருந்தால் மன உளைச்சலால் தனது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அஜித்துக்கு நன்றி கூறினாலும் நன்றிக்கடன் தீராது என்றும் அவர் கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :