புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 29 செப்டம்பர் 2018 (12:55 IST)

தல அஜித் ரொம்பவே விரும்புன விஷயம் விசுவாசத்துல இருக்கு

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தல அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் சூட்டிங், கடந்த 3 வாரங்களாக இடைவிடமால் நடந்து வருகிறது. இப்போது எடுக்கப்படும் காட்சியில் அஜித் வெள்ளை சட்டை மற்றும் அணிந்து சால்ட் அன்டு பெப்பர் தோற்றத்தில் காணப்படுகிறார்.
கூடுதல் தகவல் என்னவென்றால், விசுவாசம் படத்தில் புல்லட் பைக்கில் சீரிப்பாயந்து செல்லும் பல காட்சிகள் உள்ளதாம். அதிவேகமாக பைக்கில் செல்லும் சீன்களில் அஜித் டபுள் எனர்ஜியுடன் நடித்திருப்பார் என்பதை யூகிக்க முடிகிறது. ஏனெனில் பாக்ஸ் ஆபிஸ் கிங்கான தல அஜித்துக்கு பைக் ரேஸ் மிகவும் பிடித்த  விஷயம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே...
 
விசுவாசம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய  கதாபாத்திரத்திரங்களில் ரோபோ சங்கர், யோகி பாபு, ரமேஷ் திலக், தம்பி ராமையா, கோவை சரளா, மற்றும் ரவி அவாங்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2019ம்  ஆண்டு பொங்கலுக்கு விசுவாசம் படத்தை திரைக்கு கொண்டு திட்டமிட்டுள்ளார்கள்.