புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (13:55 IST)

எத்தன உயரம் இமயமல?- விஸ்வாசம் படத்தின் பாடல் வரிகள்?

விஸ்வாசம் படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதி விஸ்வாசம் படத்தின் பாடல் தொடர்பான புதிய அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளர்.

 
அஜித்-சிவா கூட்டணி வீரம், வேதாளம் போன்ற வெற்றிப்படங்களையும், விவேகம் என்ற தோல்விப் படத்தையும் அடுத்து நான்காவது முறையாக விஸ்வாசம் படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்திற்காக முதன் முதலாக அஜித் படத்திற்கு இசையமைக்கிறார் இமான். சத்யஜோதி பில்ம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் வெளியீடாக இப்படம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் அஜித் தனது வழக்கமான ஹேர்ஸ்டைலான வெள்ளைமுடி, வெள்ளைதாடியுடன் ஒரு தோற்றத்தோடும் கருப்புதாடியோடு இளமையான இன்னொரு தோற்றத்திலும் காணப்பட்டார். இதையடுத்து அஜித் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் பாடல்கள் பற்றிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர் அருண் பாரதி தனது டிவிட்டரில் அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டு அதன் கீழ் ‘எத்தன உயரம் இமயமல அதில் இன்னொரு சிகரம் எங்கதல’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் அஜித்தின் அறிமுகப் பாடலின் ஆரம்ப வரிகளாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.