2 வது இடம் பிடித்த இந்தியா: சாதித்த அஜித் அணி
நடிகர் அஜித் ரிமோட் மூலம் இயங்கும் குட்டி வாகனங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர். இயற்கை பேரிடர் சமயங்களில் ஆளில்லா விமானங்கள் மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்ஷா என்னும் குழுவை உருவாக்கியுள்ளனர். இந்த குழு தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் ஆராய்ச்சி சார்ந்த போட்டிகளில் பங்குபெற்று வருகின்றனர். இந்த குழுவின் ஆலோசகராக அஜித் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லேண்டில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தக்ஷா அணி உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த 11 குழுக்கள் தேர்வாகின.
இதில் அஜித் வழிநடத்திய தக்ஷா குழுவின் ஆள் இல்லா குட்டி விமானம் அதிக நேரம் பறந்து 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தது. அஜித் மற்றும் தக்ஷா குழுவினருக்கு வாழ்த்துக்கள்.