திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 19 செப்டம்பர் 2018 (15:53 IST)

விசுவாசத்தில் தல அஜித் சண்டை போடும் காட்சிகள் லீக்!

தல அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் இறுதிகட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

 
இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா விறுவிறுப்பாக இயக்கி வருகிறார் . தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக் ரமேஷ் திலக், யோகி பாபு , போஸ் வெங்கட், கோவை சரளா, ஜாங்கிரி மதுமிதா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்  
 
பாலிவுட் நடிகர் ரவி அவனா விசுவாசம் முக்கிய வில்லனாக நடித்து உள்ளார். இவருடன் அஜித் சண்டை போடும் புகைப்படங்கள் இணைய தளத்தில் கசிந்து உள்ளது. பாரம்பரியமான வேஷ்டியை மடித்துக் கொண்டு அஜித் சண்டைக்கு தயாராகிறார். ரவி அவானா ரத்தக்கரை படிந்த டீசர்ட் அணிந்து உள்ளார். 

 
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகள் அனைத்தும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டது.