சூர்யாவின் "காப்பான்" லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ ..!

Last Updated: சனி, 12 ஜனவரி 2019 (14:59 IST)
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'என்.ஜி.கே' படத்தில் நடித்து வந்தார் சூர்யா. ஆனால் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் சூர்யா. 


 
லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் மோகன்லால், சூர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
 
இந்த படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தினார் இயக்குநர் கே.வி.ஆனந்த். அதில் 'மீட்பான்', 'காப்பான்', 'உயிர்கா' ஆகிய தலைப்புகள் இடம்பெற கடைசியில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க "காப்பான்"  என்ற தலைப்பை தேர்வு செய்தனர். இந்தியா மட்டுமல்லாது லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்துவருகிறது . இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ர் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ஹாரிஸ் ஜெயராஜ்  இசையமைக்கும் இப்படத்திற்கு பிரபல பாடகி "ஜோனிதா காந்தி" பாடல் பாடியுள்ளார். 


 
இவர்  “சென்னை எக்ஸ்ப்ரஸ்” படத்தில் டைட்டில் சாங் மற்றும் ஏ.ஆர். ரகுமானின் ‘ரவ்னாக்' ஆல்பம் , தமிழில் “ஓகே கண்மணி”உள்ளிட்டவற்றில் தனது மேஜிக் குரலில்  பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :