வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (20:32 IST)

ஜனவரி 1, புத்தாண்டில் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

சூர்யா நடித்து வரும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. அதேபோல் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 37' திரைப்படமும் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில் சூர்யா 37' திரைப்படத்தின் டைட்டில் குறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது டுவிட்டரில் மூன்று டைட்டில்களை பதிவு செய்து அவற்றில் ஒன்றை தேர்வு செய்யும்படி ரசிகர்களிடம் கேட்டிருந்தார். மீட்பான்', 'காப்பான்' மற்றும் 'உயிர்கா' ஆகிய மூன்று டைட்டில்களில் 'உயிர்கா' டைட்டில்தான் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது. எனவே இந்த டைட்டிலைதான் இயக்குனரும் தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் அறிவிக்கப்படும் என கே.வி.ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது சூர்யாவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

லைகா தயாரிப்பில், ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.