வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 26 டிசம்பர் 2018 (12:00 IST)

சூர்யா படத்துக்கு ரசிகர்கள் தேர்ந்தெடுத்த 'யுனிக்' டைட்டில்!

'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குனர் செல்வராகவனின் ‘என்.ஜி.கே ’ மற்றும் கே.வி.ஆனந்தின் பெயரிடப் படாத படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படம் சூர்யாவின் 37வது படமாக உருவாகி வருகிறது. 


 
இதில் ஹீரோயினாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ், பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி, ஆர்யா, இயக்குனர் சமுத்திரக்கனி என முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.  
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'சூர்யா 37' என்றே அழைக்கிறார்கள் படக்குழுவினர். இந்நிலையில், 'மீட்பான், காப்பான், உயிர்கா' ஆகிய மூன்று பெயர்களில் சிறந்த ஒரு டைட்டிலை சூர்யா படத்துக்கு தேர்ந்தெடுங்கள் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார், இயக்குனர் கே.வி.ஆனந்த். 
 
இதில் பெரும்பாலானோர் 'உயிர்கா' என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளனர். உயிர்கா என்றால் ஆபத்திலிருந்து காப்பவன் எனப் பொருள். 
 
ஆதலால் சூர்யா - கே.வி.ஆனந்த் படத்துக்கு 'உயிர்கா'வே டைட்டிலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.