சசிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறாரா...?

sasikumar
Last Updated: புதன், 2 ஜனவரி 2019 (14:37 IST)
சுப்பிரமணியபுரம் படம் மூலமாக இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமான சசிக்குமார் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனையடுத்து அவர் ஒரு சரித்திரப் படம் இயக்கப்போவதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்தது. அதாவது அவர் நடிகர் விஜயிடம் கதை சொன்னதாகவும் ஆனால் விஜய் நடிக்க மறுத்ததாகவும் புலி படத்தின் தோல்வியே அதற்குக் காரணம் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சசிக்குமார் இந்த சரித்திர கதையை நடிகர் சூர்யவிடம் சொல்லி ஓகே  செய்து  விட்டதாகவும்,  இவ்வருடத்தின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :