நியூஸிலாந்தின் பவுலிங்கை துவம்சம் செய்த திசர பெரேரா : ஜெயசூர்யா ரெகார்டை உடைத்து புதுசாதனை

perara
Last Modified சனி, 5 ஜனவரி 2019 (18:24 IST)
இலங்கை - நியூஸிலாந்து அணிகள் பங்கேற்கும் 2 வது ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்கவ்னியில் நடைபெற்றது.
இன்றைய பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது.
 
முதலில் பேட்டிங் தேர்வி நியூஸிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆடிய இலங்கை அணி 112/2 என்ற நிலையில் சற்று சொதப்பியது. 
 
எனினும் களத்தில் தடுப்புச் சுவராக நின்று ஆடிக்கொண்டிருந்த திசரா பெரேரா ஒவ்வொரு பந்தையும், தெறிக்கவிட்டார்.இவர் 57 பந்துகளில் சதம் அடித்து . 74 பந்துகளில் 140 ரன்களை எடுத்தார்.இருப்பினும் இலங்கை அணி 46.2 ஓவர்களில் 298 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
 
இலங்கை அணிக்கு இதில் என்ன ஆறுதல் என்னவென்றால் முன்னாள் இலங்கை வீரர் ஜெயசூர்யாவின் 11 சிக்ஸர் சாதனையை முறியடித்த திசர பெரேரா 13 சிக்ஸர் அடித்து புதிய சாதனை படைத்தார் . அத்துடன் அவர்  ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.


இதில் மேலும் படிக்கவும் :