செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 நவம்பர் 2018 (18:32 IST)

பாக்யராஜின் ராஜினாமா நிராகரிப்பு ஏன்? –கடிதம் மூலம் விளக்கம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்த பாக்யராஜின் கடிதத்தை மற்ற சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுச்செயலாளர் போன்றோர் ஏற்க மறுத்து விட்டனர்.

சர்கார் கதை விவகாரத்தில் ஈடுபட்டதால் தான் தனிப்பட்ட முறையில் பல அசௌகர்யங்களுக்கு ஆளானதால் திரை எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தார், நடிகர் பாக்யராஜ். தனது ராஜினாமா கடிதத்தையும் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பினார்.

மேலும் தேர்தலில் நின்று வெற்றி பெறாமல் தான் நேரடியாக தலைவரானதுதான் இந்த அசௌகர்யங்களுக்கு காரணம் எனக் கூறிய அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் சந்த்க்கப்போவதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து சற்று முன்னர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மனோஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’தங்கள் ராஜினாமா கடிதம் குறித்து அனைத்து நிர்வாகிகளிடமும் போனில் பேசினோம். அனைவருமே ஒருமித்த குரலில் தங்கள் ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர்.  எனவே எப்போதும் போல நீங்களே தலைவராக தொடரவேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.