புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 நவம்பர் 2018 (18:32 IST)

திடீர் திருப்பம்: கே.பாக்யராஜ் ராஜினாமா நிராகரிப்பு

சர்கார் கதை தன்னுடைய செங்கோல் கதை என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரை விசாரித்த தமிழ் திரை எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ் சர்கார் கதையும் வருணின் செங்கோல் கதையும் ஒன்றுதான் எனக் கூறினார். 
 
இதனையடுத்து நீண்ட இழுபறிக்குப் பிறகு சர்கார் கதை திருட்டு விவகாரத்தை ஒப்புக்கொண்ட இயக்குனர் முருகதாஸ் வருண் ராஜேந்திரன் பெயரை படத்தில் போடவும் அவருக்கு சன்மானமான 30 லட்சம் ரூபாயும் அளிப்பதாக ஒப்புக்கொண்டார். 
 
இந்த விஷயத்தில் பாக்யராஜ் காயப்பட்டதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று யாரும் எதிர்பாராத வகையில் தனது தலைவர் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். மேலும், போட்டியின்றி இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதால், சர்க்கார் விவகாரத்தில் தாம் நிறைய அவமானங்களை சந்தித்ததாகவும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என பாக்யராஜ் தெரிவித்தார்.
 
ஆனால், இதில் திடீர் திருப்பமாக எழுத்தாளர் சங்கம் பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்ப முடியாது என நிராகரித்துள்ளது. இதற்கான அறிக்கையை பொதுச்செயலாளர் மனோஜ் குமார் கடுதம் வெளியிட்டுள்ளார். மேலும், பாக்யராஜ் தலைவர் பதவியில் தொடரவே அனைத்து உறுப்பினர்களும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.