1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 நவம்பர் 2018 (18:30 IST)

சர்கார் எதிரொலி: கே.பாக்யராஜ் திடீர் ராஜினாமா

இயக்குனர் கே.பாக்யராஜ் திரை எழுத்தாளர் சங்க தலைவர் பதவி இருந்து ராஜினாமா செய்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ராஜினாமாவிற்கு சர்கார் திருட்டு கதை விவகாரம் காரணம் என கூறப்படுகிறது. 
 
சர்கார் கதை திருட்டு கதை என்ற விவகாரத்தை முன்னெடுத்த கே.பாக்யராஜ் இதற்கு ஒரு நல்ல முடிவையும் கொண்டுவந்தார். அதோடு, இந்த விவகாரத்தில் தனக்கு பல காயங்கள் ஏற்பட்டதகாவும் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்நிலையில், இன்று அதிரடியாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலைவர் பதவியேற்று 6 மாதங்களே ஆன நிலையில் இவர் இந்த முடிவை எடுத்துள்ளதற்கு சர்கார் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 
அதாவது சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்று என கூறியிருந்ததால் எனக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டது. நான் ஒரு வேலை தேர்தலில் நிற்காமல் தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டதா என தெரியவில்லை. அடுத்து தேர்தல் நடைபெற்றால் கண்டிப்பாக போட்டியிடுவேன். 
 
சர்கார் குறித்து புகார் வந்த போது உண்மையாகவும் நியாமாகவும் முடிவு எடுக்க முடிவு செய்தேன். இதனால் முருகதாஸிடம் கெஞ்சியும் அவர் உடன்படாததால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாக இருக்கும் படத்தின் கதையை கூறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். இது தவறான செயல், இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
 
அதோடு, எனக்கு நடந்த ஒழுங்கீனங்களையும், சிக்கல்களையும் சங்க நலன் கருதி வெளியிட மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.