1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2017 (17:24 IST)

காதலருக்காக களமிறங்கிய சமந்தா

தான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், தன் காதலருக்காக புரமோஷன் செய்து வருகிறார் சமந்தா.


 

 
சமந்தாவின் காதலரான நாக சைதன்யா நடித்துள்ள தெலுங்குப் படம் ‘யுத்தம் ஷரணம்’. கிருஷ்ண மாரிமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில், லாவண்யா திரிபாதி ஹீரோயினாக நடித்துள்ளார். தனக்கும், இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், தன் காதலருக்காக படத்தை புரமோட் செய்து வருகிறார் சமந்தா. படத்தைப் பற்றி வரும் ட்வீட்களை ரீட்வீட் செய்து வருகிறார் சமந்தா. நாக சைதன்யாவைவிட சமந்தாவுக்கு ரசிகர்கள் அதிகம். 
 
தென்னிந்திய சினிமாவில் தற்போதைய பிரபல காதல் ஜோடி இவர்கள்தான். சமந்தா தன் காதலருக்காக ஏகப்பட்ட விஷயங்கள் செய்து வருகிறார். இவர்களின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.