வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (12:49 IST)

படமாக்கப்படுகிறதா சமந்தா- நாக சைத்தன்யா காதல் கதை??

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். 


 
 
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் நட்சத்திர திருமணமாக இவர்களின் திருமணம் பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் நாக சைதன்யா இவர்களது காதல் மற்றும் திருமணம் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை. அவர் நல்ல குணமுடையவர். அவர் எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் என தெரிவித்தார்.
 
இதோடு சேர்த்து, நாங்கள் முதன் முதலாக சந்தித்தது முதல் கல்யாணம் வரை நடந்த விஷயங்களை சினிமா படமாக எடுக்கலாம். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க ரெடி எனவும் கூறியுள்ளார்.