1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (12:44 IST)

படத்தில் இருந்து வெளியேறியதாக கூறிய மெர்சல் பட நாயகி!

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என மூன்று ஹிரோயின்கள்  நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 
மூன்று கதாபாத்திரங்களுடன் விஜய் நடித்து வரும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். இதில் சமந்தா தனது காட்சிகளை முடித்துவிட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 
 
அதில் மெர்சல் படத்தில் தனது பாகம் முடிந்தது. `கத்தி', `தெறி', `மெர்சல்' என விஜய் உடன் மூன்று அருமையான படங்களில் நடித்துவிட்டேன். அவருடன் பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. விஜய் சிறந்த நண்பர், மரியாதைக்குரியவர்" என  பதிவிட்டுள்ளார்.
 
`மெர்சல்' படத்தில் இருந்து ஏற்கனெவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.