மெர்சல் அப்டேட்: நீதானே மெலடி பாடலின் டீஸர் வெளியீடு!!
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என மூன்று ஹிரோயின்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தனது 100 வது படமாக தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள நீதானே மெலடி பாடல் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்த பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை எ.ஆர். ரகுமான் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். மேலும் இன்று மாலை முழு பாடலும் வெளியாவதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.