வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (18:00 IST)

திருமணத்துக்குப் பின் முதல் படமே கணவருக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தா

திருமணத்துக்குப் பின் சமந்தா நடிக்கும் முதல் படத்தில், அவருக்கு ஜோடியாக நாக சைதன்யா நடிக்கிறார்.


 

 
சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்குள் தன் கைவசம் உள்ள படங்களை முடித்துக் கொடுத்துவிட பரபரப்பாக உழைத்து வருகிறார் சமந்தா. திருமணத்துக்குப் பிறகு அவர் நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி வேறு எழுந்தது.

இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு அவர் நிச்சயம் நடிப்பார் என்ற செய்தி உண்மையாகியிருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு தெலுங்குப் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் சமந்தா. மாருதி இயக்கும் இந்தப் படத்தில், நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். நவம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இவர்கள் இருவரும் ஏற்கெனவே ‘மனம்’ உள்ளிட்ட சில படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.