பிரேமம் பட ஹீரோயினின் காதலர் இவர்தானா?
பிரேமம் படத்தில் நடித்த செபாஸ்டின் மடடோனா ஒரு பாடகரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் 2015ல் வெளியாகி மாபெரும் ஹிட்டான படம் தான் பிரேமம். இதில் நிவின் பாலி, சாய்பல்லவி, அனுபாமா உள்ளிட்டோர் நடித்திருப்பர். இந்த படத்தில் செலின் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் மடோனா செபாஸ்டின். இவர் தான் கடைசியாக ஹீரோவிற்கு ஜோடியாவார்.
இதற்கு பின் இவர் தமிழில் பவர்பாண்டி, கவன், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் செபாஸ்டின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இசையமைப்பாளர் ராபி அபிராமுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு சிலரிடம் இருக்கும் போதுதான் நாம் நாமாக இருக்க முடியும், அப்படிபட்டவர்கள் வாழ்க்கையில் கிடைப்பது அதிர்ஷ்டம் என பதிவிட்டுள்ளார். இதனால் இவர் தான் செபாஸ்டினின் காதலர் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.