வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 டிசம்பர் 2018 (23:25 IST)

காதலருடன் பிக்பாஸ் ஜூலி நடிக்கும் திரைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருசிலர் பார்வையாளர்களிடம் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றாலும், திரையுலகில் வாய்ப்புகள் பெற்று பிசியாகி உள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பார்வையாளர்களின் கடும் வெறுப்பை சம்பாதித்த ஜூலி, ஏற்கனவே 'அனிதா எம்பிபிஎஸ்', அம்மன் தாயே, உத்தமி ஆகிய மூன்று படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

ஜுலியின் காதலர் மார்க் ஹம்ரான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ஜூலி நடிக்கவுள்ளார். இந்த படத்தை எழில்துரை என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'செஞ்சிட்டாளே என் காதலை' என்ற படத்தை இயக்கி நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் பூஜை இன்று நடந்ததாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.