புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (19:49 IST)

'தளபதி 63' படத்தின் நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் நாயகி யார் என்பது குறித்த தகவல் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருந்தது தெரிந்ததே. நயன்தாரா, ராஷ்மிகா, சமந்தா, காஜல் அகர்வால் உள்பட பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

'தளபதி 63' படத்தின் நாயகி நயன்தாரா என அதிகாரபூர்வமாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கிய 'வில்லு' படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன் நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு நயன்தாராவை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது என்பவதால் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், தளபதியுடன் மீண்டும் நயன்தாராவை திரைப்படத்தில் இணைத்துள்ளது பெருமையாக இருப்பதாகவும் அர்ச்சனா கூறியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.