திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 1 டிசம்பர் 2018 (15:37 IST)

காதலுக்கு மௌனம் ஒரு தடையில்லை ...இந்தக் காதலர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா...?

நெல்லை  மாவட்டத்தில் உள்ள புளியங்குடியை சேர்ந்தவர் சேவியர் செல்வம் என்பவருக்கும் மதுரையில் உள்ள வாடிப்பாடியை சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண்ணுக்கும் சில  மாதங்களுக்கு முன்பு நிச்சயம் நடைபெற்றது. 

இதில் என்ன பெரிய ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இவர்கள் இருவராலும்  வாய் பேச முடியாது. ஆனாலும் பெரியோர்கள் தான் இவர்களுக்கு நிச்சயத்தை முன்நின்று  நடத்திவைத்தனர்.
 
இந்நிலையில் எந்த நல்லகாரியம், நடக்கு முன்பு எதாவது ஒரு தடங்கல் வருமே அதுபோல மாப்பிள்ளை வேறுஜாதி என்று கூறி திருமணத்திற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்  பிரச்சனை ஏற்பட ஒருகட்டத்தில் இருவீட்டாரும் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
முன்னரே செல்வத்துக்கு வைஷ்ணவியை பிடித்துபோனதால் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர்.
 
எனவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உறவினர்களுக்கு தெரிந்தால் ஒன்று சேர விடமாட்டார்கள் என்று உணர்ந்த ஜோடி நெல்லையில் உள்ள தூரத்து உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தனர். அதன்பின் பாதிரியார் சேகர் எனபவர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
 
இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு கூறிய வைஷ்ணவியின் உறவினர்கள் போலீஸில் புகார் செய்தனர்.ஆனால் மணப்பெண் சேவியர் செவத்துடன் தான் வாழ்வேன் என்று கூறியதால் கழுத்தில் தாலியுடன் காட்சியளித்த வைஷ்ணவியை போலீஸார் கணவருடன் அனுப்பி வைத்தனர்.
 
வாய்பேச முடியாத காதலர்கள் வீட்டை எதிர்ந்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.