சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேரும் 'சாவித்திரி’ நாயகி...

keerthy
Last Modified புதன், 19 டிசம்பர் 2018 (20:04 IST)
கோலிவுட் ஹீரோயின்களுக்கு இருக்கும்  அதிகபட்ச ஆசை என்பது இந்தியத் திரையுலகில் இருபெரும் நடிகர்களான ரஜினி, கமலுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதே ஆகும்.
தற்போது அந்த பாக்கியம் கீர்த்து சுரேஷுக்கு கிட்டியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் லொரு பேச்சு அடிபடுகிறது.
 
ஆம் ! ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்தாகவும் மிகப் பிரமாண்டமாக அந்தப் படம் வெளிவரப் போவதாகவும் தகவல் வெளியானது.
 
ஆனால் அதிகாரப் பூர்வமாக எந்த தகவலும் இதுநாள் வரை வெளிவரவில்லை.அதே சமயம் ரஜினியுடன்  கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போகிறார் என்ற செய்தியும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இந்நிலையில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் நடிப்பதைத்தான் அவரது ரசிகர்கள் ஆர்வமுடன்  எதிர்பார்த்துள்ளனர்.கூடிய சீக்கிரம் அந்த அறிவிப்பு வெளியாகும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :