மக்கள் பார்வைக்கு எஸ்பிபி நினைவகம் திறப்பு

Last Modified வெள்ளி, 2 அக்டோபர் 2020 (10:15 IST)

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்தின் நினைவிடத்தை மக்கள் பார்வைக்காக திறந்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமண்யம் செப்டம்பர் 25 ஆம் தேதி மருத்துவமனையில் காலமானார். கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர் அதில் இருந்து மீண்டு விட்டாலும், அவரின் நுரையீரல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இதயமுடக்கம் ஏற்பட்டு காலமானார்.

இந்நிலையில் அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து இப்போது பொதுமக்கள் அவரது நினைவிடத்தைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமுக இடைவெளியுடன் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :