செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 16 ஜூன் 2025 (17:13 IST)

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

Lone survivor Video viral

அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் அனைவரும் பலியான நிலையில் ஒருவர் மட்டும் தப்பித்த நிலையில், அவர் தப்பி நடந்து வந்த புதிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

 

கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787 ட்ரீம்லைனர் மாடல்) விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே மீண்டும் கீழிறங்கத் தொடங்கி மருத்துவக்கல்லூரி விடுதி ஒன்றின்மீது மோதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேரும் பலியான நிலையில், ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

 

விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற அந்த நபர் எப்படி உயிர் பிழைத்து வந்தார் என்பதே பலருக்கு ஆச்சர்யமாக இருந்து வரும் நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கட்டிடத்தில் விமானம் மோதி கட்டிடம் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும்போது, விஸ்வாஸ் குமார் ரமேஷ் கட்டிடத்தில் உள்ளேயிருந்து காயங்களுடன் நடந்து வருகிறார். அவரை அங்குள்ளவர் பத்திரமாக அழைத்து செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K