1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 16 ஜூன் 2025 (17:15 IST)

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மாடல் அழகி ஒருவர், சோனிபட் கால்வாயில் உள்ள அவரது வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
 
 ஷீதல் என அடையாளம் காணப்பட்ட இவர், கொலை செய்யப்படுவதற்கு முன் காணாமல் போனதாக அவரது சகோதரி புகார் அளித்திருந்தார். ஷீதல் வேலைக்கு சென்ற பிறகுதான் காணாமல் போனதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
நேற்று இரவு உடல் கண்டெடுக்கப்பட்டு, இன்று காலை ஷீதல் சௌத்ரி என்று உறுதி செய்யப்பட்டது. ஷீதலின் காதலருக்கு சொந்தமான கார் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காதலனிடம் ஷீதல் மரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
 
சோனிபட் ஏ.சி.பி. அஜித் சிங், கால்வாயில் கிடைத்த பெண்ணின் உடல் ஷீதல் என அடையாளம் காணப்பட்டதாவும், இது குறித்து பானிப்பட்டில் காணாமல் போன புகார் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. ஷீதல் இசைத்துறையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva