புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 16 ஜூன் 2025 (16:59 IST)

உங்க டெல்டாக்காரன் வேஷம் பல்லிளிக்கிறது மு.க.ஸ்டாலின்! - அண்ணாமலை ஷேர் செய்த வீடியோ!

Annamalai Stalin

தஞ்சையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை ‘டெல்டாக்காரன்’ என கூறிக்கொண்ட நிலையில் அதுகுறித்து விமர்சித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஒரு பதிவிட்டுள்ளார்.

 

அதில் விவசாயிகள் போராட்டத்தை போலீஸார் கலைத்து கைது செய்வதாக குறிப்பிட்டுள்ள அவர் “தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக இருப்பதைக் கண்டித்து, முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு என, பொய்யான தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து விவசாயிகளை ஏமாற்றியது, தங்கள் நிலங்களைக் காக்கப் போராடிய திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டது என, கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஒன்றரை ஆண்டுகளாகப் போராடி வரும் விவசாயிகள் மீதா உங்கள் அடக்குமுறையைக் காட்டுவது? நான்கு வருடங்களில் நீங்கள் போட்ட வேடங்களில், தேர்தல் நேரத்தில் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல்லிளிக்கிறது முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களே.

 

உடனடியாக, கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக, விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என, திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K