தொடர்புடைய செய்திகள்
- பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!
- இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!
- எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!
- WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!
இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!
சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை பலமிக்க ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி வென்றது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி ஒரு ஐசிசி கோப்பையை வென்றுள்ளது. வழக்கமாக chokers என கேலி செய்யப்படும் தென்னாப்பிரிக்க அணி அந்த அவப்பெயரை இந்த வெற்றியின் மூலம் துடைத்தெறிந்துள்ளது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி மூவர் கூட்டணி என அழைக்கப்படும் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இதுவரை சேர்ந்து விளையாடிய எந்தவொரு இறுதிப் போட்டியையும் தோற்றதில்லை.
இந்நிலையில் இந்த தோல்வியை அடுத்து ஆஸி அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் “இனிமேல் இந்தக் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்லக் கூடாது. ஹேசில்வுட்டுக்கு உடல்தகுதி சரியாக இல்லை. அவர் தேசிய அணிக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டினார்.” என விமர்சனம் வைத்துள்ளார்.