1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (18:56 IST)

பிரதமர் மோடி மட்டுமே சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறார்- இளையராஜா

சென்னையில்   உள்ள நாரதகான சபாவில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற இளையராஜா, ''இந்தியாவை எத்தனையோ பிரதமர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால், மோடி மட்டுமே சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் பிராணண பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

அயோத்தி ராமர் கோயில் கருவறை ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர்  பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. அதன்பின்னனர், பால ராமர் பிரதிஷ்டை அடுத்து, பிரதமர் மோடி தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தார்.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி  இன்று சென்னையில்   உள்ள நாரதகான சபாவில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளையராஜா,

‘’இன்றைய நாள் சரித்திரத்தில் முக்கியமான ஒரு நாள் ஆகும். இந்தியாவை எத்தனையோ பிரதமர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால், மோடி மட்டுமே சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறார்.

பிரதமர் மோடியைப் பற்றி பேசினாலே கண்ணில் நீர் வருகிறது.  ராமர் பிறந்த இடத்திலேயே கோவவில் கட்டப்பட்டுள்ளது. முன்பெல்லாம் மன்னர்கள் கோயில் கட்டினார்கள், தற்போது பிரதமர் கோவில் கட்டியுள்ளார். அயோத்தி செல்லாமல் தமிழகத்தில் உள்ளது வருத்தம் அளிக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.