1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (16:41 IST)

திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டவர் சாலை விபத்தில் மரணம்: உதயநிதி இரங்கல்..!

நேற்று சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடந்த நிலையில் இதில் கலந்து கொண்ட திமுக இளைஞரணியை சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த கழக உறுப்பினர் தம்பி சதீஷ்குமார், சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். 
 
பூத் கமிட்டி உறுப்பினராக ஆக்கப்பூர்வமாக கழகப் பணிகளில் ஈடுபட்டு வந்த தம்பி சதீஷ்குமாரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும்.
 
Edited by Mahendran