வியாழன், 12 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (08:31 IST)

சென்சார் ஆனது தனுஷின் ‘இட்லி கடை’… யாரெல்லாம் பார்க்கலாம்?

சென்சார் ஆனது தனுஷின் ‘இட்லி கடை’… யாரெல்லாம் பார்க்கலாம்?
தனுஷ் தனது நான்காவது படமாக (இயக்குனராக) ‘இட்லி கடை’ படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படம் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு அனைவரும் பார்க்கும் U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.