1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (13:01 IST)

பிரதமர் மோடியை பாராட்டிய நடிகர் விஷால்

அயோத்தியில் ராமர் கோயில் இன்று திறக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்து வரும் நிலையில், நடிகர் விஷால் பிரதமர்  பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த  ராமர் கோவில் இறுதிக் கட்டப்பணிகளை அடைந்த  நிலையில், இன்று  திறப்பு விழா மற்றும்  கும்பாபிஷேக விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி, அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், முக்கிய தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று, ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி பிரதமர் மோடி முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  குழந்தை ராமரின் 51 அடி சிலை கோவில் கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், ராமர் சிலையின் பாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வைத்து  பிரார்த்தனை செய்தார்.

இந்த நிலையில், நடிகர் விஷால் பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில், 

அன்புக்குரிய மாண்புமிகு பிரதமர் மோடி சாப், மற்றொரு சிறந்த சாதனைக்கும், உங்கள் தொப்பியில்  சேர்ந்துள்ள மற்றொரு இறகுக்கும் வாழ்த்துகள், ஜெய் ஸ்ரீராம்.

ராமர் கோவில் பல ஆண்டுகளாக மற்றும் தலைமுறைகளாக நினைவுகூரப்படும் மற்றும் இந்த அற்புதமான தருணத்திற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும். சல்யூட் யூ. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்  என்று தெரிவித்துள்ளார்.