திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (18:47 IST)

இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், இராமரின் பெயரால் வெற்றிவாகை சூடியுள்ளது- திருமாவளவன்

''அயோத்தியில் வரலாற்றுத் திரிபு வாதம், பெரும்பான்மை ஆதிக்க வாதத்தால் வென்றுள்ளது. இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், இராமரின் பெயரால் வெற்றிவாகை சூடியுள்ளது''என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

ஆனால், இந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது: 

''அயோத்தியில் வரலாற்றுத் திரிபு வாதம், பெரும்பான்மை ஆதிக்க வாதத்தால் வென்றுள்ளது. இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், இராமரின் பெயரால் வெற்றிவாகை சூடியுள்ளது.

இராமர் என்கிற சத்திரிய அடையாளத்தை ஆயுதமாக ஏந்தி, மோடி என்கிற வைஸ்யரைக் கொண்டு அப்பாவி சூத்திர இந்துக்களை ஏய்த்து அவர்களை வீழ்த்திய பிராமண சனாதனிகளின் அரசியல் சூதாட்ட வெற்றி விழாதான் அயோத்தியில் நடந்தேறியுள்ளது.

இந்துத்துவா என்னும் பெயரில் சைவம் உள்ளிட்ட பிற இந்து அடையாளங்கள் யாவற்றையும் பார்ப்பனிய வைணவமயமாக்கும் சூழ்ச்சி அரங்கேறியுள்ளது. இது இசுலாமியர், கிறித்தவர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த தேசத்திற்கும், அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கும் எதிரானது'' என்று தெரிவித்துள்ளார்.