’என்.ஜி.கே’ படம் படுதோல்வியா ? சூர்யா உருக்கமான ’டுவிட்’

surya
Last Updated: வெள்ளி, 7 ஜூன் 2019 (15:28 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த  படம் என்.ஜி.கே. இதில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நாயகிகளாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் வகையில் சூர்யாவின் ரசிகர்கள் 215 அடி உயரமான ஒரு கட் அவுட்டை திருத்தணி அருகே திருவள்ளூர்- சென்னை நெடுஞ்சாலை பகுதியில் அமைத்தார்கள். இதற்காக சுமார் 7 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது.
 
இந்நிலையில் என் ஜி கே படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை செல்வராகவன் - சூர்யா டீம் நிவர்த்தை செய்யாததை அடுத்து படம் படுதோல்வி அடைந்ததாகத் தகவல் வெளியானது.
 
ஆனாலும் இப்படத்தை பலரும் பாராட்டியும் , விமர்சித்துக் வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா  இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
 
அதில், திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
 
நடிகர், சூர்யா அடுத்து ஒரு பக்கா மாஸான படம் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் வெறியுடன் எதிர்பார்த்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :