வெறும் 5 நாட்களில் சூர்யாவின் NGK படம் இத்தனை கோடி வசூலா !

Last Updated: வியாழன், 6 ஜூன் 2019 (19:53 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே. படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தை பார்த்த சூர்யா ரசிகர்கள் வாவ், வவ்வாவ், சான்சே இல்லை என்றார்கள். ஆனால் படத்தை பார்த்த ஓவர் ஆல் மக்களோ ஐயோ சைக்..! இதெல்லாம் படமா? இயக்குனர் செல்வராகவனை நம்பி படத்துக்கு வந்தோம் காசு வீணானது தான் மிச்சம் என புலம்பி தள்ளினர்.  
இதனால் மிகுந்த மனா வருத்தத்திற்கு ஆளான செல்வராகவன் ஒரு ட்விட் போட்டார் அதாவது, என்.ஜி.கே. படத்துக்கான பெரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. நீங்கள் காட்டியுள்ள அன்பு, அற்புதமானது. உங்களில் சிலர் யூகித்ததைப் போல், ‘என்.ஜி.கே’ கதாபாத்திரத்தில் நிறைய அடுக்குகள், ரகசியங்கள்  மறைந்துள்ளது. படத்தை உன்னிப்பாகப் பார்க்கும்போது அவற்றை எளிதில் கண்டுகொள்ளலாம். குடும்பம் மற்றும் நண்பர்களோடு படத்தை ரசியுங்கள்” என்று பதிவிட்டிருந்தார். 
 
இந்த டீவீட்டை அடுத்து இந்த படத்தினை ரசிகர்கள் மீண்டும் பார்த்துவிட்டு படத்தில் உள்ள ரகசிய காட்சிகளை கண்டுபிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இருப்பினும் அது வசூலுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. தமிழ்நாட்டில் படம் ஓரளவிற்கு ஜெயித்தாலும் மற்ற மாநிலங்களில் படத்திற்கு தோல்வியே கிடைத்துள்ளது. இதனால் சூர்யாவின் அடுத்த பட வியாபாரத்திற்கு ஏகபட்ட பிரச்சனை வரலாம் என யூகிக்கப்படுகிறது. 
 
இந்நிலையில்  தமிழ்நாட்டில் என்.ஜி.கே 5 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற முழு விவரம் இதோ, 

 
மொத்தம் ரூ. 3.92 கோடி 

என்று மொத்தம் 52.04 கோடி வசூலித்துள்ளது 


இதில் மேலும் படிக்கவும் :