புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (22:12 IST)

'தல 60' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனா?

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திலும், மகேஷ்பாபு நடித்த 'ஸ்பைடர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து கலக்கினார். இதனையடுத்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள 'தல 60' படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது
 
மேலும் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா  அவர்கள், 'தல 60' படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரை சந்தித்ததால் இந்த வதந்தி மேலும் வலுவானது. ஆனால் இந்த தகவலை எஸ்.ஜே.சூர்யா மறுத்துள்ளார். தான் போனிகபூரை சந்தித்தது உண்மைதான் என்றும், ஆனால் தனது 'மான்ஸ்டர் படத்தை அவர் பார்க்க வேண்டும் என்று விரும்பியதால் அவருக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்வது குறித்து பேசியதாகவும் மான்ஸ்டர் படத்தின் வெற்றிக்காக தனக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் எஸ்.ஜே.சூர்யா கூறினார்.
 
மேலும் 'தல 60' படத்தில் தான் வில்லனாக நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தி வதந்தி என்றும் ஆனால் இந்த வதந்தி ஒருவேளை உண்மையானால் தனக்குத்தான் முதல் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.