எனக்கு அவர்கள் மேல் மரியாதை உண்டு – வேண்டுகோள் வைத்த எஸ் ஜே சூர்யா !

Last Modified வெள்ளி, 7 ஜூன் 2019 (10:55 IST)
அஜித் படத்தில் தான் நடிப்பதாக உலாவும் வதந்திகள் உண்மையில்லை என எஸ் ஜே சூர்யா மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
 

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, ஹீரோ, வில்லன் என எல்லா வேடங்களிலும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார். அவர் நடிப்பில் உருவான மெர்சல் மற்றும் ஸ்பைடர் படங்களில் அவரது நடிப்பு கவனம் ஈர்த்தது. அதுபோலவே சமீபத்தில் அவர் நடித்த மான்ஸ்டர் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
 
இந்நிலையில் அவர் அடுத்ததாக அஜித்தின் அடுத்த படத்தில் நடிப்பதாக ஒரு சமூகவலைதளங்களில் சில நாட்களாக உலாவர ஆரம்பித்தது.  இந்த வதந்திக்குக் காரணமாக அஜித்தின் அடுத்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் மற்றும் எஸ் ஜே சூர்யா இடையிலான சந்திப்பு அமைந்தது.  அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என எஸ் ஜே சூர்யா விளக்கம் அளித்த போதும் அஜித் ரசிகர்கள் இதனை சமுக வலைதளங்களில்  தொடர்ந்து பரப்பி வந்தனர்.
 
இதனால் வருத்தமடைந்துள்ள எஸ் ஜே சூர்யா தனது டிவிட்டர் மூலம் ‘ பிரியத்துக்குரிய ரசிகர்களே.. நான் அஜித்தின் 60 ஆவது படத்தில் நடிக்கிறேன் என்பது பொய்யானத் தகவல். நான் அஜித் மீதும் போனி கபூர் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். பொய்யானத் தகவல்களைப் பரப்பாதீர்கள். அனைவருக்கும் நன்றி’ என கெஞ்சுவது போலக் கேட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :