செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 ஜூன் 2019 (21:32 IST)

சிம்புவுடன் மீண்டும் இணையும் யுவன்ஷங்கர் ராஜா!

சிம்பு நடித்த 'மன்மதன், 'வல்லவன், 'வானம்', 'வல்லவன்', 'சிலம்பாட்டம்,  'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' போன்ற படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா ஏற்கனவே இசையமைத்துள்ள நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்திற்கும் அவர் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள அரசியல் த்ரில் படம் 'மாநாடு'. சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து இம்மாத இறுதியில் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்திற்காக சிம்பு, லண்டன் சென்று தனது உடல் எடையை குறைத்துள்ளார்.
 
இந்த நிலையில் இன்று இந்த படத்தில் இசையமைக்க யுவன்ஷங்கர்ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். இதனை வெங்கட்பிரபுவும், யுவனும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் உறுதி செய்துள்ளனர்.
 
இந்த படத்தில் இரண்டு நாயகிகள் என்றும் அவர்களில் ஒருவர் பிரபல நடிகை என்றும், இன்னொருவர் புதுமுகம் என்றும் கூறப்படுகிறது.