செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (17:39 IST)

ராமர் கோயில் சர்ச்சை – மணிரத்னதை வம்பிழுக்கும் திரௌபதி இயக்குனர்!

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா சம்மந்தமாக ராமன் ராவணன் மோதல் மீண்டும் உருவாகியுள்ள நிலையில் மணிரத்னத்தின் படத்தை கேலி செய்யும் விதமாக மோகன் ஒரு டிவிட்டை பகிர்ந்துள்ளார்.

நீண்ட ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகராம் முற்று பெற்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கா பணிகள் கோலகலமாய் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கின. இரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் பலர் அதை கொண்டாடும் விதமாக #ஜெய்ஸ்ரீராம் என்ற ஹேஷ்டேகுகளை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ராமரை விடவும் ராவணன் மீது ஈர்ப்பு உள்ள சிலர் அந்த ட்ரெண்டிங்கிற்கு எதிராக ராவணனை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர். அதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இடையே ராமர் – ராவணன் ஆதரவு பதிவுகள் அதிகரித்துள்ளன. ராவண ரசிகர்கள் பலர் #TamilsPrideRavanan #LandOfRavanan என்ற ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழகத்தில் ராவணனுக்கு ஆதரவாகவே அதிகளவில் டிவீட்கள் பகிரப்பட்டன.

இந்நிலையில் திரௌபதி பட இயக்குனர் மோகன் ‘அடுத்தவன் வீட்டு பெண்களை ஆள் இல்லாதப்ப தூக்கிட்டு போறவனை கொண்டாடுறதும், அந்த வகையறா நாங்க அப்படின்னு பெருமையா பேசுறது எல்லாம் வேற லெவல் ப்ரோ.. வேற எல்லாம் லெவல்.. கலக்குங்க ப்ரோ’ எனக் கூறியுள்ளார். ஆனால் அதோடு நில்லாமல் மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் இருந்து ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ராவணன் திரைப்படத்தில் மணிரத்னம்  ராவணன் பார்வையில் கதை சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.