தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!
நாளை தமிழகத்திலும் புதுச்சேரியிலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில, தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு தனது வாழ்த்துகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்திருக்கிறார் .
ஏற்கனவே, 12ஆம் வகுப்பு தேர்வு தொடங்கிய நாள், மாணவர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்தியிருந்தார். அதே போன்று, இப்போது 10ஆம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
"நாளைத் தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் அனைத்து தம்பிகள், தங்கைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மன உறுதியுடன், ஆர்வத்துடன், நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். உங்கள் வெற்றி உறுதி!" என விஜய் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Edited by Siva