வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (13:37 IST)

கொரோனா காலத்தில் அதிகரித்த சைபர் குற்றங்கள்! – ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கம் உள்ள நிலையில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்குவது போன்ற நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வங்கி கணக்குகளை ஆன்லைன் மூலமாக நிர்வகிக்க மக்கள் பலருக்கு தெரியாது என்பதால் குற்ற செயல்களிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சிறிய ரக குற்றங்கள் தவிர கொரோனா மருந்து குறித்த ஆராய்ச்சிகளை திருடுவது, வங்கி தளங்களை முடக்க முனைவது போன்ற பெரிய அளவிலான குற்றங்களும் அதிகரித்துள்ளன.

இதுகுறித்து ஐ.நா தீவிரவாத தடுப்பு பிரிவு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகம் முழுவதிலும் சைபர் குற்றங்கள் கடந்த 7 மாத காலத்தில் வழக்கத்தை விட 350% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் விரக்தியில் உள்ள மக்களின் வெறுப்புணர்வை தூண்டி பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.