ரூ.225-க்கு கொரோனா மருந்து: சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு!
இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி விலை மற்றும் கிடைக்கும் காலம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் இறந்துள்ள நிலையில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் குழுவோடு இணைந்து சீரம் இண்ஸ்டிடியூட் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது பரிசோதனையில் இருக்கும் இந்த தடுப்பூசியானது மே மாதம் முதல் தயாரிப்பு பணிகள் தொடங்கபோவதாக சீரம் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் ஆதார் பூனவல்லா தெரிவித்தார். மே மாதம் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் முடிவடையும். இந்தியாவுக்கும் உலகத்திற்கும் தேவையான அளவு மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசியின் விலை உத்தேசமாக ரூ.1000 இருக்கலாம் என்றும், துல்லியமான புள்ளி விவரம் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசி ரூ.225க்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும். 2021 ஆம் அண்டின் துவக்கத்தில் இந்தியாவில் வசிக்கும் 10 கோடி பேருக்கும் மருந்து கிடைக்க ஏற்பாடு எனவும் சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு.