1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Kanguva second single update

கங்குவா செகண்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ரஜினிகாந்த்
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் நவம்பர் 14 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா படம் ரிலீஸாகி இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால் கங்குவா படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடல் நிகழ்காலத்தில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளதை போஸ்டர் காட்டுகிறது. இதுவரை வெளியான கங்குவா போஸ்டர், டிரைலர் எல்லாம் பீரியட் காலத்தில் நடப்பது போல உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
மர்ம மாளிகைக்குள் சென்று சிக்கிக்கொள்ளும் பிச்சைக்காரன்… எப்படி இருக்கு ‘பிளடி பெக்கர்’ டிரைலர்!