வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (19:17 IST)

ரஜினிகாந்த் - மணிரத்னம் இணையும் படம் உண்மையா? என்ன சொல்கிறார் சுஹாசினி..!

சமீப காலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு தகவல் என்னவெனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் மணிரத்னம் மீண்டும் ஒருமுறை கூட்டணி அமைத்து திரைப்படம் செய்ய இருக்கின்றனர் என்ற செய்தி தான். இதற்கு நடிகை சுஹாசினி தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
 
1991-ஆம் ஆண்டு வெளிவந்த 'தளபதி' திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் இணைந்திருந்தனர். இதனால் 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் மீண்டும் கூட்டணி அமைத்து 'தளபதி 2' உருவாக வாய்ப்பு உள்ளதாகக் கூறி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
 
இந்த செய்திகளுக்கு பதிலளித்த சுஹாசினி, "அப்படி எதுவும் இருக்கவில்லை; இது கற்பனையில் ஏற்பட்ட வதந்தி மட்டுமே" என்று கூறி, இந்த தகவல் உண்மை அல்ல என்பதை உறுதிப்படுத்தினார்.
 
அதே சமயத்தில், மணிரத்னம் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'தக்லைஃப்' படத்தை இயக்கி வருவதால், அடுத்த படம் குறித்து மணிரத்னம் இன்னும் யோசிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
 
 
Edited by Siva