புதன், 16 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (14:29 IST)

கங்குவா படத்தின் கதையைக் கேட்டுவிட்டு அஜித் இதைதான் சொன்னார்… சிறுத்தை சிவா அளித்த பதில்!

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் நவம்பர் 14 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா படம் ரிலீஸாகி இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால் கங்குவா படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் சிவா “இந்த படத்தின் கதையை அஜித் சாரிடம் நான் சொன்னேன். அதைக் கேட்டுவிட்டு நன்றாக இருப்பதாக சொல்லி பாராட்டினார். விரைவில் நாங்கள் மீண்டும் இணைய உள்ளோம். அந்த படம் பற்றி அஜித் சாரே அறிவிப்பார்” எனக் கூறியுள்ளார்.