1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Junior NTR devara second single song release update

அனிருத் இசையில் தேவரா செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் அப்டேட்!

கொரட்டாலா சிவா
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமான இதற்கு ‘தேவரா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் கடலை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது.இந்நிலையில் இந்த படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகின்றனர். முதல் பாகம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  இது ஒரு காதல் பாடலாக இருக்கும் என்பதை படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
"வாஸ்கோடகாமா" திரைப்பட விமர்சனம்!