வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (18:52 IST)

புதிய காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளை காணொளியில் திறந்து வைத்தார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திருச்சி சிந்தாமணி பகுதியில் ரூ. 3 கோடியே 5 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் தரைதலத்துடன் கூடிய 5 தளங்களுடன் காவல் நிலையம் கட்டப்பட்டது. இதன் முதல் தளத்தில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் 2ம் தளத்தில் குற்றப்பிரிவு காவல் நிலையம் 3வது தளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் 4வது தளத்தில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு மற்றும் காவல் துணை ஆணையர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளன.
 
இதேபோல் பீமநகரில் ரூ. 2 கோடியே 58 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் 4தளங்களுடன் கட்டிடம் கட்டப்பட்டது.
 
இதன் முதல் தளத்தில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் 2வது தளத்தில் குற்றப்பிரிவு காவல் நிலையம் 3வது தளத்தில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இயங்க உள்ளது.
 
மேலும் உறையூர் பகுதியில் ரூ. 3கோடியே 1லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் காவலர்கள் முதல் தலைமை காவலர்களுக்காக 4 தளங்களுடன் 24 குடியிருப்புகள் கட்டப்பட்டன. 
 
இந்த கட்டிடத்தை  சென்னையில் இருந்து முதல்வர் மு. க. ஸ்டாலின் காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்பு கட்டிடத்தை நேற்று காலை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.