புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 15 நவம்பர் 2018 (19:48 IST)

ஜோதிகா மேடத்திற்காகத் தான் ஒப்புக்கொண்டேன் - சிம்புவின் வைரல் வீடியோ

காற்றின் மொழி படத்தில் நடிக்க ஜோதிகாவிற்காகவே ஒப்புக்கொண்டேன் என நடிகர் சிம்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
 
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘காற்றின் மொழி’. விதார்த், லட்சுமி மஞ்சு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில், சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்த படம் நாளை வெளியாகவுள்ளது. 
 
இந்நிலையில் சிம்பு தற்போது ஒரு வீடியோ ஒன்றை பேசி  வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவில் சிம்பு பேசியதாவது ,  காற்றின் மொழி திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஜோதிகா இந்த படத்தில் படத்தில் அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார். இதில் நான் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் வந்து செல்வேன். ஜோதிகாவிற்காகவே தான் இதில் நடிக்க சம்மதித்தேன்.
 
இந்த படத்தை இயக்குனர் ராதாமோகன் மிகவும் அற்புதமாக இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள வித்தார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ். பாஸ்கர், ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை என சிம்பு தெரிவித்துள்ளார். மேலும் படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.